Tuesday, 28 May 2013

படித்ததில் பிடித்தது

குழந்தையும் தெய்வமும் ஒன்று என்கிறார்களே…?

-
ஒரு நாள் பணக்காரத் தந்தை தன் குழந்தையை
வெளியே கூட்டிச் சென்றார்.
-
அவரது குழந்தைக்கு ஏழைகள் எப்படி வாழ்கிறார்கள்
என்று காண்பிக்க எண்ணி, ஒரு ஏழைக் குடும்பத்துடன்
தங்கினார்.
-
இரண்டு நாட்கள் அங்க தங்கி விட்டு வீடு திரும்பினார்
-
அவங்க எவ்வளவு ஏழையா இருக்காங்க பாத்தியா?
இந்த சுற்றுலாவுல இருந்து என்ன கத்துக்கிட்டே..?
-
மகன் சொன்னான்:
-
பார்த்தேன் நாம் ஒரு நாய் வெச்சிருக்கோம்
அவங்க நாலு நாய்கள் வெச்சிருக்காங்க..!
-
நாம நீச்சல் தொட்டி வச்சிருக்கோம்
அவங்ககிட்டே நதி இருக்கு
-
இரவுக்கு நமக்கு லைட் இருக்கு
அவங்களுக்கு நட்சத்திரங்கள் இருக்கு
-
சாப்டுறதுக்கு நாம கடைல பொருள் வாங்கறோம்
அவங்க, அவங்களேஅறுவடை செஞ்சி சாப்பிடறாங்க..!
-
திருடங்க வராம இருக்க நாம வீடு சுத்தி செவுரு கட்டி
இருக்கோம்..
அவங்களுக்கு அவங்க சொந்தக்காரங்க, நண்பர்கள்
இருக்காங்க..!
-
ரொம்ப நன்றிப்பா..! நாம எவ்வளவு ஏழையா
இருக்கோம்னு எனக்கு காட்டிப் புரிய வச்சதுக்கு..!

Wednesday, 8 May 2013

மின் கட்டணம் கணக்கிடும் முறை



வீட்டு இணைப்புகளுக்கானது:-
-
முதல் நிலை:-
-
1-100 யூனிட் வரை ரூபாய் 1.00
நிலைக்கட்டணம் இல்லை.
(நீங்கள் 100 யூனிட்டுக்குள் எவ்வளவு உபயோகித்தாலும்
ஒரு யூனிட்டுக்கு ஒரு ரூபாய் மட்டும் தான். கூடுதலாக
எந்த கட்டணமும் இல்லை.)

—————————————
-
இரண்டாம் நிலை:-

1-200 யூனிட் வரை ரூபாய் 1.50.

நிலைக்கட்டணம் ரூபாய் 20.00.
(நீங்கள் 100 யூனிட்டுக்கு மேல் உபயோகிக்கும்
சமயம் இந்த இரண்டாம் நிலைக்கு வந்துவிடுவீர்கள்.
நீங்கள் 110 யூனிட் உபயோகித்தால் உங்களுக்கான
தொகை 165.00 + நிலைக்கட்டணம் ரூ.20.00 ஆகமொத்தம்
ரூபாய் 185.00 செலுத்தவேண்டும்.)

——————————-
மூன்றாம் நிலை:-
-
1-200 யூனிட் வரை ரூபாய் 2.00.
201-500 யூனிட் வரை ரூபாய் 3.00.
நிலைக்கட்டணம் ரூபாய் 30.00.
(நீங்கள் 200 யூனிட்டுக்கு மேல் உபயோகிக்கும்
சமயம் இந்த மூன்றாம் நிலைக்கு வந்துவிடுவீர்கள்.
நீங்கள் 210 யூனிட் உபயோகித்தால் உங்களுக்கான
தொகை 200 யூனிட் வரை 400.00+ 10 யூனிட்டுக்கு
3.00 வீதம் 30.00+ கூடுதல் கட்டணம் ரூ,30.00
ஆகமொத்தம் ரூபாய் 460.00
செலுத்தவேண்டும்.)

————————–
-
நான்காம் நிலை:-

1-200 யூனிட் வரை ரூபாய் 3.00.
201-500 யூனிட் வரை ரூபாய் 4.00.
500 க்கு மேல் ரூபாய் 5.75
நிலைக்கட்டணம் ரூபாய் 40.00

(நீங்கள் 500 யூனிட்டுக்கு மேல் உபயோகிக்கும் சமயம்
இந்த நான்காம் நிலைக்கு வந்துவிடுவீர்கள்.
நீங்கள் 510 யூனிட் உபயோகித்தால் 

-
முதல் 200 யூனிட்டுக்கு 600.00+ அடுத்த 300
யூனிட்டுக்கு 4 ரூபாய் வீதம் 1200.00+ 10
யூனிட்டுக்கு 5.75 வீதம் ரூபாய்
57.50+கூடுதல் கட்டணம் ரூபாய் 40.00
ஆகமொத்தம் ரூ.1898.00 நீங்கள்
செலுத்தவேண்டும்)
-